வாழ்நாள் கல்வி

மூலிகைப் பூச்சி விரட்டி

மூலிகைப் பூச்சி விரட்டி

மூலிகைப் பூச்சி விரட்டி

Facebook twitter googleplus pinterest LinkedIn


மூலிகைப் பூச்சி விரட்டி அறிமுகம்

எருக்கு, தங்க அரளி, சிறியா நங்கை, நொச்சி, ஆடாதொடா, தும்பை, பார்த்தீனியம், ஊமத்தை, துத்தி, உண்ணிச்செடி, எட்டி, சீதா இலை, சீமைக் கருவேல், காட்டாமணக்கு, புகையிலை உள்ளிட்ட தாவரங்கள் கசப்பு தன்மை மிகுந்தது. ஒடித்தால் பால் வடியும். இவைகளை கால்நடைகள் உட்கொள்ளாது. மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவைப்படும் தாவர இலைகள் வீட்டின் அருகாமை, தோட்டங்கள், வயல் வெளிகள், வேலி ஓரங்களில் தென்படும்.

 

மூலிகைப் பூச்சி விரட்டி தேவையான பொருள்

1 ஏக்கருக்குத் தேவையானவை (அனைத்தும் 1 கிலோ)

•        நொச்சி இலை                   

•        எருக்கன் இலை                  

•        சோத்துகத்தாலை சோறு                                                               

•        வேப்ப முத்து     

•        ஆடாதொடைஇலை       

மேற்கண்ட இதை எல்லாத்தையும் தனித்தனியா உரல்ல இடிச்சி சாறு எடுக்கணும். இதுல இருந்து 7 கிலோ சாறு நமக்கு கிடைக்கும். இந்த சாறை 100 லிட்டர் தண்ணில கலந்து தெளிக்கணும். இது ஒரு ஏக்கருக்கான அளவு. உங்க இடத்த பொறுத்து உங்களுக்கு தேவையானத கூட குறைச்சி போட்டு செஞ்சிக்கோங்க. இன்னொரு விஷயம், இத இருப்பு வச்சி உபயோகிக்கக்கூடாது.. தேவையான நேரத்துல தயார் செஞ்சி உடனே உபயோகிச்சிரனும்.

அல்லது கீழ்க்காணும் முறையையும் பயன்படுத்தலாம்

•        நாட்டு பூண்டு                      - 1 கிலோ

•        பச்சை மிளகாய்                 - 1/2 கிலோ

•        இஞ்சி                                      - 1/2 கிலோ

•        புகையிலை                          - 1/2 கிலோ

•        வேப்பங்கொட்டை சாறு - 200 மில்லி

•        மண்ணெண்ணெய்            - 100 மில்லி

•        காதி சோப்பு (300 கிராம்)   - 1 எண்ணம்

முத நாள் ராத்திரி 3 லிட்டர் தண்ணிய எடுத்து, அத நல்லா கொதிக்க வச்சி, அதுல புகையிலைய உள்ள போட்டு, அப்படியே தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, வெள்ளப்பூடை அரைச்சி, மண்ணெண்ணெய் கூட சேந்து கலந்து அதையும் தனியா எடுத்து வச்சிருங்க. மறுநாள் காலைல, வேப்பங்கொட்டை சாறையும், காதி சோப்பையும் ஒரு அரை லிட்டர் தண்ணி எடுத்து அதுல போட்டு நல்லா கரைக்கணும். இப்ப மீதி இருக்குறது எது..? பச்சை மிளகாயும், இஞ்சியும் இதையும் அரைச்சி தனியா எடுத்து வச்சிருங்க. அடுத்தால, நாம முத நாள் ராத்திரி புகையிலை போட்டு தண்ணி சேத்து வச்சிருந்தோம்ல, அது, அப்புறம் அந்த பூண்டு கரைசல்.., காலைல சேத்த சோப்புக்கரைசல், இப்ப அரைச்ச இஞ்சி மிளகாய் விழுது இப்படி எல்லாத்தையும்  ஒண்ணா சேத்து, நல்லா கலக்கி, ரெண்டு தடவ நல்லா வடிகட்டி எடுத்து வச்சுக்கோங்க. அடுத்தாப்புல, இப்படி நாம தயார் பண்ணுன கரைசல, ஒரு நூறு லிட்டர் தண்ணியோட சேத்துட்டா அது நம்ம பயிர்க்கு தேவையான கரைசல் தயார். இதுதான் இயற்கை முறைல செய்யக்கூடிய பூச்சி விரட்டி. 

 

மூலிகைப் பூச்சி விரட்டி பயன்படுத்தும் முறை

ஆரம்பக்கட்ட தாக்குதலாக இருந்தால் 1, 2 சதவிகித கரைசலை தயாரித்து பயிர்கள் முழுமையாக நனையும்படி தெளிக்க வேண்டும். இதனால் பூச்சிகளின் அனைத்து பருவங்களும் அழிக்கப்பட்டு விடும். பூச்சியின் தாக்குதல் அதிகமிருப்பின் 3,5 சதவிகித கரைசல் தேவைப்படும். இக்கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை 2,3 முறை பயன்படுத்தலாம். 1 சதவிகித கரைசலை தயாரிக்க 1 கிலோ அளவிற்கு தாவர இலைகளை சேகரித்து, அதனை 80 லிட்டர் தண்ணீர் மற்றும் கோமியத்தில் ஊர வைக்க வேண்டும். பின் வடிகட்டி 100 லிட்டர் வருமளவிற்கு அதாவது மீதம் 20 லிட்டர் தண்ணீர் கலந்து கொண்டால் ஒரு சதவிகித மூலிகை கரைசல் தயாராகி விடும். தொடர்ந்து ஒரே வகை மூலிகை செடிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மூலிகை இலைச்சாறு தானே என அதிக அளவில் பயன்படுத்தக்கூடாது. அதனால் நம்மை செய்யும் பூச்சிகள் கூட அழிந்து விடும். சில சந்தர்ப்பங்களில் பயிர்கள் கருகி விடக்கூடும்.