கன்று கழிச்சல் நோய்
கன்று கழிச்சல் அறிமுகம்
இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது கன்றுக் கழிச்சல் நோய் ஆகும். இது நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் ஆகும். இந்நோய் கோலிபார்ம் என்ற கிருமியால் ஏற்படுகிறது. குடற்பகுதியிலுள்ள மற்ற பாக்டீரியா நுண்கிருமிக்ள இவற்றுடன் சேர்ந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கன்று கழிச்சல் நோய்க்கான காரணங்கள்
கன்று ஈன்ற ஓரிரு வாரங்களில் இந்நோயின் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். சீம்பால் கொடுக்கப்பட வில்லையெனில் கன்ற கழிச்சல் அதிகமாக ஏற்படும். அசுத்தமான தண்ணீர், மோசமான சுற்றுப்புறச் சுகாதாரம், அதிக அளவு பால் கொடுத்தல் போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.
கன்று கழிச்சல் நோய் அறிகுறிகள்
கன்று கழிச்சல் நோய் தடுப்பும் பாதுகாப்பும்
மூலிகை மருத்துவம்
கீழ்கண்ட மூலிகை மருந்துப் பொருட்கள் ஒரு மாடு அல்லது மூன்று கன்றுகளுக்கு போதுமானதாகும்.
கலவை ஒன்று
1. சின்ன சீரகம் – 10 கிராம்
2. கசகசா – 10 கிராம்
3. வெந்தயம் – 10 கிராம்
4. மிளகு – 5 எண்ணிக்கை
5. மஞ்சள் – 5 கிராம்
6. பெருங்காயம் – 5 கிராம்
இந்தப் பொருட்களை நன்கு கருகும் வரை வறுத்தெடுத்து சிறிது நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும்.
கலவை இரண்டு
1. வெங்காயம் – 2 பல்
2. பூண்டு – 2 பல்
3. கறிவேப்பிலை – 10 இலை
4. பனைவெல்லம் – 100 கிராம்
5. கல் உப்பு – 100 கிராம்
இந்தப் பொருட்களை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். மேற்கண்ட இரண்டு கலவைகளையும் கலந்து சிறு சிறு உருண்டைகளாக கல் உப்பில் தோய்த்தெடுத்து நாக்கின் சொரசொரப்பான மேல் பகுதியில் தேய்த்தவாறு ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.