வாழ்நாள் கல்வி

மரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )

மரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு )

மரக்கன்று பராமரிப்பு (அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு பராமரிப்பு )

Facebook twitter googleplus pinterest LinkedIn


பராமரிப்பு அலங்கார பூச்செடிகள் வளர்ப்பு

அலங்காரச் செடிகளின் நாற்றுப்பண்ணை

நிலம் தயாரிப்பு

 • நாற்றுப் பண்ணைக்கான நிலத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகும். நாற்றுப்பண்ணையின் நிலத்தினைக் குறைந்தபட்சம் நான்கு பங்காக பிரிக்கலாம்
 • தாய் செடிகளுக்கான நிலப்பரப்பு
 • விதை உற்பத்திக்கான நிலப்பரப்பு
 • மலர்ப்பயிர் விதை நாற்றுக்கான நிலப்பரப்பு
 • விதை நாற்றுக்கள் மற்றும் விதையில்லா முறையில் பயிர்பெருக்கம் செய்யப்பட்ட பல அண்டு பயிர்களுக்கான நிலப்பரப்பு
 • உழுதல் மற்றும் குறுக்கு உழுதலால் நாற்றுப்பண்ணை நிலத்தை தயார் செய்ய வேண்டும். தேவையில்லாத அனைத்துப்பொருளையும் நீக்கிவிட்டு நிலத்தை சமன் செய்ய வேண்டும்.

விதைப்படுக்கை மற்றும் நாற்றுப்படுக்கை:

 • மலர்ப்பயிர் விதை நாற்றுச்செடிகளை வளர்ப்பதற்கு விதைதப்பபடுக்கைக்கான சில நிரந்தர அல்லது தற்காலிக கட்டமைப்புகளைத் தயார் செய்ய வேண்டும். இப்படுக்கைகள் தரை மட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 0.5 முதல் 0.75 மீ உயரம் கொண்டிருக்கும் படுக்கைகளின் அகலம் 0.75 மீ முதல் 1.00 மீ வரையும் நிலத்தின் இருப்பினைப் பொறுத்து நீலமும் இருக்கும். பல ஆண்டு செடிகள் சேமிப்பதற்கும் விற்பனைக்கான செடிகளுக்கும் நாற்றுப்படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.
 • தாய் செடிகளை சேகரித்து நடவு செய்தல்: தாய் செடிகளை நடவு செய்தல் நாற்றுப்பண்ணையை உருவாக்குவதற்ககான முக்கிய செயல்பாடாகும். தாய் செடிகள் உண்மை நிலை வகையாகவும் இரகமாகவும் இருக்க வேண்டும். செடிகள் முறையாக அடையாளம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருக்கும் செடிகளை சேகரிப்பதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தாய் செடிகளை வீரிய வளர்ச்சியுடன் முறையாக பராமரிக்க வேண்டும். இல்லாவிடில் பயிர்ப்பெருக்கம் செய்யப்பட்ட செடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

உலர்ந்த, சுத்தமான மண் மற்றும் மட்கிய எருவினை சேகரித்தல்

 • மலர்ப்பயிர் நாற்றுக்களை மழைக்கால அல்லது ஆரம்பகுளிர்கால பருவத்தில் வளர்ப்பதற்காக மண் மற்றும் மட்கிய எருவை கோடைகாலத்தில் சேமித்து வைக்க வேண்டும். மழைக்கால பருவத்தில் உலர்ந்த மண் மற்றும் எருவினை சேகரிப்பது மிகவும் கடினம். இவையில்லாமல் மழைக்காலத்தில் நாற்றுக்களை வளர்க்க முடியாது.
 • மலர்ப்பயிர் விதைகளை உற்பத்தி செய்தல்: மலர்ப்பயிர் விதை உற்பத்தியானது தனிச்சிறப்பு வாய்ந்த பணியாகும். விதைகள் கவனத்துடன் உற்பத்தி செய்யப்பட வேண்டும். விதையின் தரம் நன்றாகயிருந்தால் விதை முளைப்பு சதவிகிதம், நாற்றின் வீரியம், தழை மற்றும் இனப்பெருக்க வளர்ச்சி ஆகியவை சிறந்து விளங்கும். தரமுடைய விதைகளை அறுவடை செய்த பின்னர் அவற்றின் முளைப்பு சதவிகிதம் மற்றும் வீரியம் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு முன்னர் சரிபார்த்து கொள்ள வேண்டும்.
 • நாற்றுப் படுக்கைகளில் பயிர்ப்பெருக்கம் செய்த செடிகளை சேமித்தல்: பயிர்ப்பெருக்கம் செய்யப்பட்ட செடிகள் சிறந்த வளர்ச்சிக்காகவோ கடினப்படுத்தப்படுவதற்கோ நாற்றுப் படுக்கைகளில் நடப்படுகின்றன பொதுவாக இத்தகைய படுக்ககைள் பகுதி நிழலின் கீழே அமைக்கப்படுகின்றன.

உரமிடுதல்

 • உரமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். வீரிய வளர்ச்சியடைய செடிகளே வாங்குவோரைக் கவர்ந்திழுக்கும். ஆனால் அதிகமாக உரமிடுதல் பயிர்களின் சேமிப்புக்கு பயன்தராது.

நீர்ப்பாய்ச்சுதல்

 • உரமிடுதலைப் போல நீர்ப்பாய்ச்சுதலும் மிகவும் முக்கியம். பயிர்களின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்ச வேண்டும் நாற்றுப்பண்ணை தனது சொந்த நீர் ஆதாரத்தினைக் கொண்டிருக்க வேண்டும். இதற்காக ஒரு கிணறினை (12மீ ஆழம் x 3மீ அகலம்) தோண்டி துணைப்பொருட்களுடன் கூடிய 2.0 HP மண்ணெண்ணய் இறைப்புத்தொகுதியை பொருத்தலாகும். ஆரம்பநிலையில் நுண்துளி தெளிப்பு முறை நீர்ப்பாசனம் உகந்ததல்ல.

பயிர் பாதுகாப்பு

 • பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலை கண்டறிவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தாய் செடிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் அவற்றிலிருந்து பயிர் பெருக்கம் செய்யப்படும் செடிகளுக்கும் நோய் பரவும். எனவே நோய் தொற்றினைக் கண்டறிந்தவுடன் தேவையான கட்டுப்பாட்டு வழிமுறைகளே உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 • பையினால் மேலுறை இடுவதால் காற்றினால் மற்றும் கனி வெடிப்பதனால் ஏற்படும் விதை சேதம் தவிக்கப்படுகின்றது.

 

 

சில பிரபலமான அழகுச் செடி வகைகள்

தழைச்செடிகள்

 • தூஜா, க்ரோட்டன்ஸ், அலக்கேஸியா, ஆந்தூரியம், கோலியஸ், கொளக்கேஸியா, மான்ஸ்டிரா, ஃபில்லோடென்ட்ரான், ட்ரளீனா, ஃபைகஸ் ப்யுமிளா, ப்ளியோமேவால் ரெஃப்ளெக்ஸ் வேரிகேட்டா, ஃபைகஸ் ரேடிகன்ஸ் வேரிகேட்டா, ஃபைகஸ் ப்யுமிலா, அஸ்பேரகஸ் ப்ளூமோசஸ், அஸ்பேரகஸ் ஸ்பிரின்கேரி, சின்டாப்சஸ் ஆரியஸ், பெகோனியா ‘ரெக்ஸ்’ பல வண்ணமுடைய களேடியம், அக்ளோனீமா கம்மீயூடேட்டம், அரேலியா எளிகன்டிஸ்ஸிமா, டைஃபன்பேக்கியா எக்ஸாட்டிகா, டைஃபன்பேக்கியா பிக்டா, ஃபில்லோடென்ட்ரான் பைபன்னேட்டிஃபிடம்,  பாளியால்தியா லான்கிஃபோலியா போன்றவை

மலர் செடிகள்

 • ரோஜா (ஹைப்ரிட் டீ, ஃப்ளேரிபண்டா, பாலியேன்தஸ்,  மினியேச்சர் ரோஜா போன்றவை), ஏஸ்டர், மல்லிகை, பாலியேன்தஸ், மினியேச்சர் ரோஜா போன்றவை), ஏஸ்டர், மல்லிகை, செவ்வந்தி, சம்பங்கி, ஜெர்பிரா, செண்டுமல்லி, கார்நேசன், கனகாம்பரம், டிசம்பர்பூ, பெகோனியா க்ளாக்கோஃபிலா, பேஸ்ஸிஃப்ளோரா  சிருலியே, ஆஃப்ரிகன் வயலெட், பெகோனியா மேனிக்கேட்டா, கால்சியேலேரியா, ஜெரேனியம், அஜேலியா இன்டிகா போன்றவை

படர்கொடிகள்

 • காகிதப்பூ மாதவிக் கொடி, பூண்டுக் கொடி, அரிஸ்டலோக்கியா, மல்லிகை வகைகள் போன்றவை
 • கள்ளி வகை மற்றும் சதைப்பற்றுள்ள செடிகள்: கற்றாழை, அயோனியம், ஹரீவார்த்தி, அகேவ் அமெரிக்கானா மார்ஜினேட்டா, கோளிலெடான் அண்டுலேட்டா, யூஃப்போர்பியா ஸ்ப்ளென்டன்ஸ், சிடம் சிற்றினம், எப்பிஃபிள்ளம் சிற்றினம், ரிஃப்சேலிஸ், ஜைகோகேக்டஸ், ஒபன்சியா மைக்ரோடேசிஸ், ஒபன்சியா ட்யூனிகேடா போன்றவை.
 • மரங்கள்:பாட்டில் ப்ரஷ், பாகினியா சிற்றினம், எரித்ரீனா இன்டிகா, இக்சோரா பர்விஃப்ளோரா, ஜக்கராண்டா, செண்பகம், பாய்ன்சியானா ரெஜியா, கேசியா சிற்றினம், அரக்கேரியா கூக்கி, ப்ரஸ்ஸையா ஆக்டினோஃபில்லா, ஆம்ஃபெர்ஸியா நொபிலிஸ் போன்றவை.

 

ஆதரம் : விகாஸ் பீடிய