பப்பாளி சாகுபடி
விவசாய சம்பந்த குறிப்பு மற்றும் குரல் பதிவு
பப்பாளி பயிர் செய்தல்
மக்களின் அன்றாட உணவு பட்டியலில் பப்பாளியும் தற்போது இடம் பெற்றிருக்கிறது. அதிக மருத்துவ குணம் நிறைந்த பப்பாளிக்கு சந்தையில் எப்போதும் மதிப்பு வரவேற்பு இருப்பதால் பப்பாளி பயிரிட்டு விற்பனை செய்யலாம். பப்பாளிப் பயிர் பலவகை பட்ட மண்ணிலும் வளரும் இயல்புடையது. படுகை நிலங்கள், மணல் கலந்த பூமி, நல்ல வடிகால் வசதி கொண்ட நீர் தேங்காத நிலங்கள் ஆகியவை பப்பாளிப் பயிரிட உகந்ததாகும். தமிழகத்தை பொறுத்தவரை ஜீன் முதல் ஆகஸ்ட் வரை நடவு செய்யலாம். தொடர்ந்து மழைப் பெய்யும் காலத்தில் நடவை தவிர்ப்பது நல்லது.